Thursday, November 19, 2026
No menu items!

ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜூர்க் லோபர்...

அரசியலில் பெண்களுக்கு எதிரான ஆன்லைன் துன்புறுத்தல்கள்..!

பெண் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான ஆன்லைன் துன்புறுத்தல் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) அறிவித்துள்ளது. பெண்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) மீளாய்வு மூலம் தூண்டப்பட்ட ஆணைக்குழு, பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் பொறுப்பை வலியுறுத்தியது. கடந்த ஆண்டு...

சிறீதரனால் கனேடிய பிரதியமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கை..!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானங்களைப்...

ஐ.நா.சபையின்  உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். "பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது: இலங்கை மக்கள் மீதான தாக்கம்" என்ற தலைப்பில் அவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்...

ஐ.நா.சபையின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் Marc-André Franche நேற்று (03.10) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது, ​​ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸின் அன்பான வாழ்த்துக்களை ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கு தெரிவித்துள்ளார். திரு. Marc-André Franche ஜனாதிபதியின் விஞ்ஞாபனத்தைப் பாராட்டியதுடன், அரசியல் பிரச்சாரத்தின் ஜனாதிபதியின் நெறிமுறைத்...

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 8 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஜபாலியா ஏதிலிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 8 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட முகாமிற்கு முன்பாக உணவு கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். இதனிடையே, காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் சுமார் 40,786 பேர் உயிரிழந்த...

போரினால் குழந்தைகள் இறப்பு வீதம் அதிகரிக்கும் ; ஐ.நா.சபை எச்சரிக்கை!

இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையில் நீண்ட காலமாக போர் நடந்து வருகின்ற நிலையில், பட்டினியின் காரணமாக காசா குழந்தைகள் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுவரையில் 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, 86,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொதுவாக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஒரு...

மத்திய தரைக்கடலில் விபத்துக்குள்ளாகிய படகுகள்!

தெற்கு இத்தாலியில் மத்தியத்தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பதினொரு அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளனர். இதனை, ஜேர்மன் தொண்டு நிறுவனம், இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஜேர்மன் உதவிக் குழுவின் நாதிர் மீட்பு கப்பல் இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது அங்கு படகு...

டுபாய் புறப்பட்டார் ஜனாதிபதி

டுபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் 28 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP28) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டுபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (30) காலை டுபாய்க்கு அவர் புறப்பட்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28)...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img