Tuesday, November 17, 2026
No menu items!

ஐக்கிய நாடுகள் சபை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்க ஜெனீவாவிற்கு புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்க நேற்று (07) அதிகாலை ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றார். இன்று  (08) ஆரம்பமாக உள்ள இந்த அமர்வில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விசேட அறிக்கை ஒன்றை அமைச்சர் வெளியிடவுள்ளார். மேலும், ஜெனீவாவில் தங்கியிருக்கும் காலத்தில் பல...

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலையினால் 1000க்கு மேற்பட்டோர் பலி!

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2) உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வௌியாகியுள்ளது. பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச...

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பின்னால் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் – ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

ஜெருசலேம் மீது நடத்தப்படும் இஸ்ரேலின் தாக்குதல்களும், பாலஸ்தீனியர்களின் இடம்பெயர்வையும் தெளிவாகக் குறிவைக்கும் வகையில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன தொடர்பாளர் பிரான்செஸ்கா ஆல்பனீஸின் அந்த அறிக்கையில், இஸ்ரேலுக்கு உதவும் 48 முன்னணி நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், அல்பபெட் இன்க் (கூகுள் தாய்க் நிறுவனம்) மற்றும் அமேசான்...

காசா போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்தில் இலங்கை ஆதரவு, இந்தியா நடுநிலை!

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, மோதல் நடந்து வருகிறது. காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இந்த போரில், இறந்ததாக காசா சுகாதார அமைச்சு...

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் ; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் உறுதிப்படுத்தப்படும் என  சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதி அளித்துள்ளார். இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச்சேவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த சந்திப்பு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. இந்த...

காசாவில் உணவுப் பற்றாக்குறை..!

காசாவில் கடந்த எட்டு வாரங்களாக நீடிக்கும் உதவி தடையின் காரணமாக, அந்த பகுதியில் அனைத்து உணவுத்தொகைகளின் கையிருப்பும் முற்றிலும் முடிந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. காசா மக்களுக்கு தங்களின் கடைசி உணவுத்தொகையை வழங்கியதை உலக உணவுத் திட்ட அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இவை சில நாட்களில் முற்றிலும் முடிந்து...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்;ஐ.நா.சபை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நிலைமையை மிகுந்த அக்கறையுடன் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐக்கிய...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து வலியுறுத்தும் ஐ.நா !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயன்முறையை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே...

ட்ரம்பின் வரிகளிலிருந்து விடுவிக்குமாறு ஐ.நா கோரிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க வரி முறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என 28 வறுமையான மற்றும் சிறிய நாடுகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. அத்துடன் அந்த நாடுகள்...

சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப்படையினர் தாக்குதல்..!

சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப்படையினர் அண்மையில் நடத்திய தாக்குதல்களில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் சபை இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. சூடான் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட டார்ஃபர் மாநிலத்தின் தலைநகரை மீட்கும் முயற்சியில் துணை இராணுவப்படையினர் அண்மையில் ஈடுபட்டிருந்தனர். இதன்படி, டார்ஃபர் பகுதியில் உள்ள ஏதிலிகள்...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img