Sunday, April 19, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் சக்தி

“வாக்கு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, , குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் பலவீனமடைவதைக் குறிக்கிறது; ஹர்ஷ டி சில்வா!

குறுகிய 2025 உள்ளாட்சித் தேர்தலின் முடிவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை மிகைப்படுத்திக் கொண்டது என்பதை நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறுகிறார். ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி எம்.பி., 2025 தேர்தல் முடிவுகள் ஆளும் அரசாங்கத்தின் வாக்காளர் ஆதரவில் குறிப்பிடத்தக்க சரிவை சுட்டிக்காட்டுவதாகக் கூறினார், குறுகிய காலத்தில்...

கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளது; ரஞ்சித் மத்தும பண்டார!

கொழும்பு நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளின் ஆதரவைக் கோரும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களை வென்ற போதிலும், எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை  ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன. மன்னார் நகர சபை  (ITAK) இலங்கை...

வவுனியாவில் வேட்பாளர்  ஒருவருக்கு  கொலை அச்சுறுத்தல்..!

வவுனியாவில் வேட்பாளர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (05.05) முறைபாடு செய்துள்ளார். வவுனியா மாநகரசபையில், வைரவபுளியங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலையில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 'கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்' என்ற தொனிப்பொருளின் கீழ் நாளை பிற்பகல் 2 மணிக்கு தலவாக்கலை நகரில் நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம்...

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி..!

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தலவாக்கலையில் மே தின பேரணி மற்றும் அணிவகுப்பை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தப் பேரணி தலவாக்கலை நகராட்சி மன்ற மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே தின பேரணி மற்றும் அணிவகுப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்...

இந்திய ஒப்பந்தங்கள் குறித்து சபையில் கேள்வி எழுப்பவுள்ளோம் – எம்.பி ஹர்ஷ டி சில்வா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (06/04/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த...

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று!

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று வியாழக்கிழமை கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறவுள்ளது. 'தொலைதூரம் காண்போம் : அணி திரள்வோம் : எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று மதியம் 1 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில் பொதுச்...

பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த ஐக்கிய மக்கள் சக்தி!

ஐக்கிய மக்கள் சக்தி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று தாக்கல் செய்தனர். கட்சியின் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் குறித்த வேட்புமனுவை தாக்கல் செய்தார். கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் மத்திய செயற்குழு உறுப்பினருமான லக்சயன் முத்துக்குமாரசாமியும் கலந்து கொண்டிருந்தார்.

தேசபந்துவினை பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவு..!

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாகவும், அதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முழுமையாக ஆதரிப்பதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img