Wednesday, November 11, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் சக்தி

தனித்து களமிறங்கும் ஐக்கிய மக்கள் சக்தி..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனிக் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இராஜிநாமா..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால திசைக்கான 11 பக்கங்களுக்கு மேல் முன்மொழிவுகளையும், அதை நினைவூட்டும் நான்கு பக்க கடிதங்களையும் இதற்கு முன்பு இரண்டு சந்தர்ப்பங்களில் எழுதியிருந்த இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், தனது...

யாழில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய உமாச்சந்திரா!

ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய SJB மற்றும் NPP..!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இன்றைய தினம் (3/17/2025) கிளிநொச்சியிலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினர். ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாவட்ட அமைப்பாளர் மரியசீலன் அவர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பாக கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் அவர்களும் கட்டுப்பணத்தை செலுத்தினர்.

சஜித் இணங்காவிடின் யானை சின்னத்தில் ஐ.தே.க களமிறங்கும்-வஜிர அபேவர்தன..!

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில், இணக்கப்பாடுகள் ஏற்படாவிடின் யானைச் சினத்தில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுமென கட்சியின் தவிசாளரும் முன்னாள் எம்.பியுமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். தற்போது நடத்தப்படும் பேச்சுக்கள் வெற்றியளித்தால் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பொதுவான சின்னத்தில் போட்டியிடும் சாத்தியம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், இன்று (15)...

ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி..!

கொழும்பு மாநகர சபைக்காக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது. ஐக்கிய தேசியக்...

சஜித்துடன் இணைந்த லக்ஷ்மன் விஜேமான்ன..!

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டு நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் லக்ஷ்மன் விஜேமான்ன இணைந்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

இணைந்து போட்டியிடபோகும் UNP-SJB !

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை காலம் வழங்க ஐ. தே. க. தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு...

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த நந்தசேன செல்லஹேவா..!

மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் நந்தசேன செல்லஹேவா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். மாத்தறை நகர சபையின் முன்னாள் பிரதி மேயராகவும் இவர் பதவி வகித்தார். இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்னவா?

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். "அரசியல் ஸ்தாபனத்தின் மீதான விரக்தியால் மக்கள் NPP-க்கு வாக்களித்து ஆட்சிக்கு வந்தனர் என்பது தெளிவாகிறது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ஏனெனில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை அல்லது...
- Advertisement -spot_img

Latest News

யாழில் அடுத்த வருடம் முதல் மெட்ரோ பேருந்து சேவைகள் அறிமுகம்

யாழ்ப்பாணத்தில் அடுத்த வருடம் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கொழும்புக்கு அப்பால் பொது போக்குவரத்து சேவையை...
- Advertisement -spot_img