Saturday, November 21, 2026
No menu items!

கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய பேருந்துகள் கொள்வனவு..!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முனையச் செயல்பாட்டுப் பிரிவில் பேருந்துகள் மற்றும் விமானங்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஏணிகள் மிகவும் பழமையானவை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பேருந்துகள் சுமார் 33 ஆண்டுகள் பழமையானவை என்றும், ஏணிகள் சுமார் 30 ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் ஏணிகளை கொள்வனவு செய்ய...

இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது..!

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்  டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (01/02/2025) கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (27/02/2025) காலை கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான வர்த்தகர் பஹ்ரைனிலிருந்து இன்றைய தினம் காலை...

கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கைது..!

போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள். கணவருக்கு 40 வயது, மனைவிக்கு 34 வயது. ஜப்பானின் நரிட்டாவிற்கு திங்கட்கிழமை (17) இரவு 8.35...

சட்டவிரோத சிகரட்களை கடத்த முயன்ற மூவர் கைது..!

அதிக அளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒரு வெளிநாட்டவர் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று நபர்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு நடத்திய தனித்தனி சோதனைகளில் இந்தக் கைதுகள்...

நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளை – சந்தேக நபர் கைது..!

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

நாடு கடத்தப்பட்ட நிலையில் சுமித் பிரியன்த கைது..!

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, இந்தியாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த “சுமித் பிரியன்த” என்பவர், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (12/02/2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 45...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சிக்கிய பெண்..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுக்களுடன் இன்று (03/02/2025) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோகந்தரவில் வசிக்கும் 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் எடுத்துச் சென்ற பல பொருட்களுடன் 47,000...

இந்தியாவில் இலங்கை மாணவர்கள் சாதனை..!

இந்தியா மதுரையில் இடம்பொற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதலிடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில்  மானிப்பாய் அன்னை மரியாள் ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சிவலீமன் சிலம்ப கழக மாணவர்களும் பாபு இஷின் ரியூ கராத்தே...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலப்படுத்தப்படும் சோதனை சாவடிகள்..!

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறைந்தது 20 கூடுதல் சோதனை சாவடிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விமான நிலையத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் அறிக்கையின்படி, கூடுதல் சோதனை சாவடிகளுக்கான இடங்களைத்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img