Friday, July 24, 2026
No menu items!

கண்டி

வட்டவளை பகுதியில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

வட்டவளை பகுதியில் இன்று (25) காலை தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்தும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும், ஒருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழப்பு..!

கண்டி, தெல்தெனிய - தென்னலந்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில்  16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தியத்தலாவ புகையிரத நிலையத்தில் புரண்டுள்ளதாக புகையிரதம்..!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தியத்தலாவ புகையிரத நிலையத்தில் சற்று முன்னர் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அக்குறனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பு…!

கண்டி மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ – 09 வீதியில் உள்ள அக்குறனை நகரம் நேற்று வெள்ளிக்கிழமை (15.11.2024) வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக அக்குறனை நகரத்தில் பல மணித்தியாலங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அக்குறனை நகரம் ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று முறை இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 38,456 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 16,781 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 10,296 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,105 சர்வஜன சக்தி...

கண்டியில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீட்பு…!

கண்டியில் இரு வெவ்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, கண்டி - அஸ்கிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த ஜீப் வாகனத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது...

வெளிநாட்டுப் பெண்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டி மத்திய சந்தையில் வைத்து பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 47 மற்றும் 48 வயதுடைய இரு பெண்களும் சீன பிரஜைகள் என...

வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி..!

கண்டி பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. ஜீப்பை சோதனை செய்ததில், அது பதிவு செய்யப்படவில்லை என்பதும், செசி மற்றும், என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த ஜீப் வண்டி சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டுள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளரும் பொலிஸாரால் கைது...

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. இதன்படி சரித் அசலங்க தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே,...

இரு பேருந்துகள் மோதி விபத்து; 18 பயணிகள் காயம்…!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (11.10) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர். அதன்படி, இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பு – கண்டி வீதியில் உதுவான்கந்த, வலகடயாவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. விபத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img