Friday, July 24, 2026
No menu items!

கண்டி

மீண்டும் மூடப்படவுள்ள கண்டி-மஹியங்கனை வீதி!

கண்டி-மஹியங்கனை வீதி பாறைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் இன்று (22) மாலை 6 மணி முதல் நாளை (23) காலை 6 மணி வரை மூடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி-மஹியங்கனை வீதி மீண்டும் திறப்பு!

அண்மைய நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (21) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை உடுதும்பர கஹட்டகொல்ல பகுதியிலிருந்து மேடுகள் மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் வீதியை மூடுவதற்கு  நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோன்று ஆபத்தான நிலைமை தொடர்ந்தும் நீடிப்பதால், இரவில் பயணிக்கும் வாகனங்களுக்கும் மக்களுக்கும்...

கண்டி – மஹியங்கனை வீதி மீளத் திறப்பு!

உடுதும்பர – கஹடகொல்ல பகுதியில் மண்சரிவு மற்றும் கல் உருளுதல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை வீதி இன்று காலை 6 மணிக்கு மீளத் திறக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்றைய தினம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். குறித்த வீதியை இரவு நேரங்களில் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு ஆபத்து...

வர்த்தகர் கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கண்டி,வத்துகாமம் நகரில் அண்மையில் மீன் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் நான்கு வாள்கள் மற்றும் மூன்று இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் வர்த்தகர் கடந்த 3 ஆம் திகதி தமது வீட்டுக்கு முன்பாக வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர்...

மருந்து ஆய்வகங்கள் குறித்து அரசாங்கத்தின் திடீர் தீர்மானம்..!

மருந்துகளை பரிசோதிப்பதற்கு அவசியமான புதிய ஆய்வகங்களை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மருந்து இறக்குமதி தொடர்பில் நிறுவனமொன்று மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் விசாரணை செய்ய...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன மரணம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன தனது 71ஆவது வயதில் இன்று காலமானார். கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் பேருந்து விபத்து – இருவர் பலி..!

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21.12.2024) காலை ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் விபத்துக்குள்ளானது. பஸ் சாலையை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தின் போது பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை பயணித்துள்ளனர், அவர்கள் அனைவரும் காயமடைந்து திக் ஓயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர்...

சீனா பறக்கவுள்ள ஜனாதிபதி..!

ஜனவரி மாதம் ஆரம்பத்தில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்றையதினம் (20.12.2024) கண்டியில் மகாசங்கத்தினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், டிசம்பர் மாதம் ஆரம்பித்து முதல் வாரத்தில் 521 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 46,048 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது...

தேங்காய் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தலையிடாதது ஏன்?

தேங்காய் விலையை 220 முதல் 230 ரூபா வரையில் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விலைக்கே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர். தேங்காய் விலை உயர்வால், புத்தாண்டுக்கு பால்சோறு சமைப்பது கூட பிரச்னையாகி விட்டதாகவும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர். சில பகுதிகளில் தேங்காய்...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img