Sunday, May 10, 2026
No menu items!

காவல்துறையினர்

உடகன்கந்த ஏரியில் நீராடச் சென்ற உயர்தர மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

உடகன்கந்த ஏரியில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் உயர்தரம் படிக்கும் 20 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. தனது நண்பர்களுடன் உடகன்கந்த ஏரியில் நீராடச் சென்ற போத நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெவேகொடவத்தை பகுதியில் உள்ள வீட்டொன்றை இலக்காகக் கொண்டு இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை எனவும், இதுபற்றி...

இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஒருவர் பலி!

அனுராதபுரம், மதவாச்சியில் இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மதவாச்சி, ரம்பேவ, ரத்மல்கஹவெவ வீதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மற்றுமொரு உந்துருளியில் பயணித்த இருவரும் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்க தடை!

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார். மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் தலைமையக காவல்துறையினர் இணைந்து நேற்று நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 45 பேருந்துகள் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான...

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவன் 16 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ள மின் ஆழியில் மின் சாதனத்தை பொருத்த முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (30) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மரணமடைந்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிபவர்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

"கட்டானை, Tower Side வத்தைபகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 33.75 லிட்டர் (45 பாட்டில்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது 900 லிட்டர் (05 பீப்பாய்கள்) கோடா, 02 செப்புத் தாள்கள், 03 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஒரு எரிவாயு குக்கர் ஆகியவற்றையும் பொலிசார் பறிமுதல்...

வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!

குருநாகல் - கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாக்குதலைக் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நடத்தியதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்,...

கொத்மலை பேருந்து விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக உயர்வு!

கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து, கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர்...

கொத்மலையில் பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு..!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img