Thursday, June 25, 2026
No menu items!

காவல்துறையினர்

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கட்டுநாயக்க,18 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த  இரண்டு இளைஞர்கள் மாயம்!

சிலாபம், தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்டை மற்றும் கலகெதர பகுதியைச் சேர்ந்த இந்த இருவரும் நேற்று மாலை காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், இருவரும் நண்பர்கள் குழுவுடன் கண்டியிலிருந்து சிலாபம் பகுதிக்கு ஒரு பொழுதுபோக்குப் பயணமாகச் சென்றிருந்தபோது இந்த...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்  398 முறைப்பாடுகள் பதிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயங்களில் 30 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கபெற்றுள்ளன. பதிவாகியுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வேட்பாளர் ஒருவரும் 7 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச்...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில், நேற்று (24) மாலை குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த 10 வயது மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மூன்று மாணவர்கள் நேற்றைய தினம் குளிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களுள் ஒருவர் காணாமல் போயிருந்தார். தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல்...

டேன் பிரியசாத் கொலை தொடர்பில் மூவர் கைது..!

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தலதா வழிபாட்டிற்கு வரும் யாத்திரிகர்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு!

தலதா மாளிகை புனித தந்ததாது கண்காட்சியின் 6ஆவது நாள் இன்றாகும். புனித தந்ததாது கண்காட்சியினை பார்வையிடுவதற்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே, சிரமங்களை தவிர்த்துகொள்வதற்காக, இன்றைய தினம் (23/04/2025) வருகைத்தருவதனை தவிர்த்து, எதிர்வரும் தினங்களில் வருகைத்தருமாறு காவல்துறையினர் பொது மக்களை கோரியுள்ளனர்.

பேருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து – 22 பேர் காயம்..!

நிட்டம்புவ - கிரிந்திவெல பிரதான வீதியில் இன்று (4/21/2025) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிர் திசையிலிருந்து வந்த பாரவூர்தியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் 20 பேர் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வைத்தியசாலையிருந்து...

அரச பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள அரச பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் யாரும் மாணவர்கள் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய சந்தேகநபர் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 வயதான...

தர்மபுரம் பகுதியில் 15 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா பறிமுதல்!

கிளிநொச்சி, புளியபொக்கனேயில் உள்ள தர்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சி போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி சிறப்பு அதிரடிப் படை மற்றும் கிளிநொச்சி காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது, ​​இந்த போதைப்பொருள் தொகை...

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

கரந்தெனிய - திவியகஹவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது . சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img