Friday, July 24, 2026
No menu items!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஹர்ஷ இலுக் பிட்டிய..!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (22/1/2025) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இ-விசா வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும்...

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற வெளிநாட்டவர்கள் கைது..!

போலி கடவுச்சீட்டுக்கள் மூலம் நாட்டிற்குள் நுழைய முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் இன்று (20/1/2025) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கஸகஸ்தான் கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த 21 மற்றும் 23 வயதுடைய இருவர் குவைத்திலிருந்து வந்தவர்கள். குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தங்கள் கடவுச்சீட்டுக்களை சமர்ப்பித்த சந்தேக...

குறைந்து வரும் பாஸ்போர்ட் கையிருப்பு-மீண்டும் வரிசையுகம் ஏற்படுமா?..!

பாஸ்போர்ட் கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், பழைய மெஷின்-ரீடபிள் பாஸ்போர்ட் (எம்ஆர்பி) முறைக்கு திரும்புவதா அல்லது இ-பாஸ்போர்ட் முறையை அமல்படுத்துவதா என்பது குறித்து அரசாங்கம் அவசர முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, இந்த முடிவு அழுத்தமானது, கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட இருப்பு விநியோக செயல்முறையை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று...

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர்கள் கைது!

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 26 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 பங்களாதேஷ் பிரஜைகள், 02...

போலி விசா மூலம் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கைது..!

போலி விசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனும் 24 வயதுடைய யுவதியும் ஆவர். சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின்...

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமுலாகியுள்ளது. கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும்...

கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய நிகழ்நிலை முறை அறிமுகம்!

கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இது 06 நவம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வருமென தெரிவித்துள்ளனர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய, பொதுமக்கள் தமது தேசிய அடையாள அட்டையை (NIC) பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதியை ஒதுக்கிக்கொள்ள...

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்…!

கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 50,000 ‘பி’ தொடர் வெற்று கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பெற்றுள்ளது. மேலும் 750,000 வெற்று கடவுச்சீட்டுகளை உரிய காலத்தில் திணைக்களம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏறக்குறைய 100,000 கடவுச்சீட்டுகள் இம்மாத இறுதியிலும், 150,000 அடுத்த மாதத்திலும் பெற்றுக்கொள்ளப்படும் என குடிவரவு...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தெரிவிப்பு..!

எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான இணையவழி முறைமை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்...

பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன் நீண்ட வரிசையில் மக்கள்!

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாலை முதலே நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும், பலர் அதிகாலை 4 மணிக்கே குடிவரவு மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img