Sunday, September 27, 2026
No menu items!

குற்றப் புலனாய்வு திணைக்களம்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி CIDயில் ஆஜர்..!

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தப்பியோடிய முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர..!

2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக களனி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது...

பாதாள உலக கும்பலின் தலைவர் மிதிகம ருவன்க்கு விளக்கமறியல் நீடிப்பு!

பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர இன்று புதன்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார். “மிதிகம ருவன்” என்பவர் இன்றைய தினம் ஸ்கைப்...

வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் CID முன்னிலையில்!

வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெலிகம - பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலே அவர் வாக்குமூலம் அளித்து வருகிறார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று (04) அவர்...

நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளை – சந்தேக நபர் கைது..!

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

நாடு கடத்தப்பட்ட நிலையில் சுமித் பிரியன்த கைது..!

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, இந்தியாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த “சுமித் பிரியன்த” என்பவர், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (12/02/2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 45...

இலத்திரனியல் பயணச்சீட்டுகள்  விநியோகிப்பதில் முறைகேடுகள்;ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள்!

தொடருந்து திணைக்களம் ஊடாக இலத்திரனியல் பயணச்சீட்டுகளை விநியோகிப்பதில் இடம்பெற்ற முறைகேடுகளில் சில அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகத்துக்கிடமான தகவல்கள் வெளியானதன் காரணத்தினால் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்...

CIDயில் வாக்குமூலம் வழங்க மனுஷ நாணயக்கார தயார்..!

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21/1/2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20/1/2025) அறிவித்துள்ளார். மனுஷ நாணயக்காரவின் பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி...

கதிர்காமம் காணி தொடர்பில் கேட்டபோது, ​​சி.ஐ.டியிடம் யோஷிதா சொன்னது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 03) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதாவது கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டும். 2007ஆம் ஆண்டு, இந்தக் காணி தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து யோஷிதாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வினவியபோது, ​​அப்போது தான்...

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதியின் மகன்..!

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (3) காலை முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் அவர் வெளியேறியுள்ளார். கதிர்காமத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட அவர், இன்று காலை 10...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img