Wednesday, April 29, 2026
No menu items!

கென்யா

கென்யாவில் வைத்திய விமானம் விபத்துக்குள்ளாகி ஆறு பேர் உயிரிழப்பு!

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. நேற்றிரவு (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நான்கு பேர் (பைலட், வைத்தியர்கள்...

நாட்டின் எதிர்காலம் வேண்டி சாலையில் குதித்த மக்கள் – ஆட்சிக்கு எதிரான போராட்டம் இரத்தத்தில் முடிந்தது!

கென்யா ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று கென்யாவில் 'மக்கள் போராட்டம்' ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 400 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டு நாட்டைத் தாக்கிய கொடிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் அலையிலிருந்து சரியாக ஒரு வருடம்...

சிங்கம் தாக்கியதில் 12 வயதுடைய சிறுமி உயிரிழப்பு!

கென்யாவின் நைரோபி பகுதியில் சிங்கத்தால் தாக்கப்பட்டு 12 வயதுடைய சிறுமி உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைரோபி பகுதியிலுள்ள நதியொன்றுக்கு அருகில், சிங்கத்தால் தூக்கிச் செல்லப்பட்டச் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிங்கம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அத்தோடு சிங்கத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் வனவிலங்குகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

கென்ய பாடசாலையில் தீ விபத்து..!

கென்ய பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கென்யா, நைரி கௌண்டியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்ப பாடசாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துகான காரணத்தைப் பொலிஸார் விசாரித்து வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும்...

ஓட்டப்பந்தய வீராங்கனைக்கு தீ வைத்த ஆண் நண்பர்..!

உகாண்டாவை சேர்ந்த ஒலிம்பிக் மரதன் ஓட்டப்பந்தய வீராங்கனையான ரெபேக்கா செப்டேகி மீது அவரது ஆண் நண்பர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது படுகாயமடைந்த நிலையில் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெபேக்கா செப்டேகி பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்டு நாடு திரும்பிய நிலையில் கென்யாவின் டிரான்ஸ் நசோயா பகுதியிலுள்ள அவரது வீட்டில்...

கென்யாவில் பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு…!!

கென்யாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் வரியை உயர்த்தப் போவதாக அந் நாட்டின் அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வரி உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட இருந்தது. இந்த தீர்மானத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (25.06) கென்யா நாடாளுமன்றத்தில் வரி...

பதவியை ராஜினாமா செய்த ஹைட்டி பிரதமர்..!

ஹைட்டியின் பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதற்கு நிலுவையில் உள்ள நிலையில், பொருளாதார அமைச்சர் Michel Patrick Boisvert இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. நாட்டின் சக்திவாய்ந்த கும்பல்களின் கூட்டணி பிப்ரவரி இறுதியில் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் மீது ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடங்கியது. கிழக்கு ஆபிரிக்க நாடு ஹைட்டியில் நிலைநிறுத்த ஒப்புக்கொண்ட ஐக்கிய...

இருமல் மருந்து விற்பனைக்கு தடை..!

6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. குறித்த இருமல் மருந்தை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துவந்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களினால் பரிந்துரை...

உலக சாதனையாளர் உயிரிழப்பு..!

ஆடவர் மரதன் ஓட்டப் போட்டியில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்டும் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேற்குக் கென்யாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வீதி விபத்தில் 24 வயதான கெல்வின் கிப்டும் மற்றும் அவரது பயிற்சியாளரான ருவண்டா நாட்டைச் சேர்ந்த கர்வைஸ் ஹகிசமானாவும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற நெடுந்தூர...

நைரோபியில் பாரிய எரிவாயு வெடி விபத்து.

கென்யா தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் எம்பகாசி மாவட்டத்தில் எரிவாயுசிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், சேதமடைந்துள்ளதையும் தீவிபத்து பல தொடர்மாடிகளிற்கு பரவியுள்ளதால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிவிபத்துக்கள், தீப்பிளம்புகள், மேலும் ...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img