கென்யாவின் நைரோபி பகுதியில் சிங்கத்தால் தாக்கப்பட்டு 12 வயதுடைய சிறுமி உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைரோபி பகுதியிலுள்ள நதியொன்றுக்கு அருகில், சிங்கத்தால் தூக்கிச் செல்லப்பட்டச் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிங்கம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அத்தோடு சிங்கத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் வனவிலங்குகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .






