Monday, November 9, 2026
No menu items!

கைது

வீதியால் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு – சந்தேகநபர்கள் மடக்கி பிடிப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு புளியம்பொக்கனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் பயணித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான...

விளக்கமறியலில் சாமர சம்பத்..!

நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் மாதம்  முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது அரச வங்கியொன்றிலிருந்து நிதியை கோரிய...

விமான நிலையத்தில் நிர்வாணமாக சென்ற பெண்!

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள டல்லாஸ் ஃபோர்த் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணமாக சென்ற பெண் ஒருவர் அங்கிருந்த ஒருவரை கடித்து காயப்படுத்தியதுடன், மேலும் இருவரை பென்சிலால் குத்தியும் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. சமந்தா போல்மா என அடையாளம் காணப்பட்ட...

கைது செய்யப்பட்டார் சாமர சம்பத் ..!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பீடி இலை மூட்டைகளுடன் இருவர் மடக்கி பிடிப்பு!

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நேற்று புதன்கிழமை (26/03/2025) இரவு மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூடைகளை...

காலியில் தோட்ட முகாமையாளருக்கு நடந்த கொடூரச் சம்பவம் !

காலி - மாப்பலகம குடமலான தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்துத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தோட்டத்தில் பழமைவாய்ந்த தேயிலை தொழிற்சாலைக்குக் கொண்டு வந்து முகாமையாளரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் குறித்த முகாமையாளர் கூச்சலிட்டதால் தோட்டத்தில் பணியாற்றும் நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதுடன்,...

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.  

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் காரர் அதிரடியாக கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இராணுவ வீரர்களின் சீருடைகள் என்பன...

வெளிநாட்டு மோகம் – கனடா செல்ல முயன்ற 11 பேர் கைது..!

மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் நேற்று (24/03/2025) பிற்பகல் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கனடாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான...

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 32 பேர் கைது..!

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட 3 ஆம் திகதி முதல் கடந்த 21 நாட்களில் 16 தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img