காலி – மாப்பலகம குடமலான தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்துத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த தோட்டத்தில் பழமைவாய்ந்த தேயிலை தொழிற்சாலைக்குக் கொண்டு வந்து முகாமையாளரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த முகாமையாளர் கூச்சலிட்டதால் தோட்டத்தில் பணியாற்றும் நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதுடன், அந்த நபரையும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முகாமையாளரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீ வைத்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here