Monday, November 9, 2026
No menu items!

கொழும்பு

யாழில் ரயிலுடன் ஹயஸ் வான் மோதுண்டு விபத்து..!

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வான் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த வான் தவசிகுளம் பகுதிக்கு செல்வதற்காக ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில்...

எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. வெலிகம உட்பட தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் எல்ல மற்றும் கொழும்பு பகுதிகளிலும் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதாக  பொலிஸ் ஊடகப்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையச் செயற்றிட்டத்தை விசேட செயற்றிட்டமாக்க அமைச்சரவை அனுமதி!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையச் செயற்றிட்டத்தை 'விசேட செயற்றிட்டமாக' பெயரிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையால் கொழும்பு தெற்கு துறைமுக செயற்றிட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தைக் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுக...

கொழும்பைச் சுற்றியுள்ள பல பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் !

கொழும்பைச் சுற்றியுள்ள பல பிரதான வீதிகளில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடும் மழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பொரளை, நகர மண்டபம், ஹோர்டன் பிளேஸ், தும்முல்ல போன்ற பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை இடையிலான ரயில் சேவையில் தாமதம்!

கொழும்பு - கோட்டை மற்றும் மருதானை இடையிலான ரயில்கள் தாமதமாகியுள்ளதாக இலங்கை ரயில்வே இன்று அறிவித்துள்ளது. கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள புகையிரத சுவிட்சில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மருதானை நோக்கி பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து  சேவைகள் இன்று இரத்து!

கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து  சேவைகள் அனைத்தும் இன்றைய தினம் (18) இரத்து செய்யப்பட்டுள்ளன. மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் தாங்கிய தொடருந்தில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக, தொடருந்து தடம்புரண்டதுடன் தொடருந்து பாதை பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பாதையினைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ள கப்பல்கள்!

கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாகக் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அண்மைக்கால வரலாற்றில், எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் ஆகிய கப்பல்களால் இலங்கைப் பெருங்கடலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நியூ டயமண்ட் கப்பல் 2020 செப்டம்பரில் இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்குள்ளாகி...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதிலளித்த உதய கம்மன்பில!

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதாக அரசாங்கம் உறுதியளித்தால் மாத்திரம் அவற்றை கையளிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அறிக்கைகள் கிடைத்த பின்னரும் அரசாங்கம் அவற்றை வெளியிடத் தவறினால் என்ன...

புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் புகையிரத சேவைகள் தாமதமடையக்கூடும்; ரயில்வே திணைக்களம்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (15) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும்...

பிரதமரை சந்திப்பதற்காக சைக்கிளில் சென்ற 14 வயதுடைய பெண்!

காத்தான்குடியைச் சேர்ந்த 14 வயதுடைய பெண் ஒருவர் தனது பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்திப்பதற்காக சைக்கிளில் வந்துள்ளார். பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் செய்தியொன்றை கையளிப்பதற்காக பாத்திமா நடா காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது,...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img