Thursday, July 23, 2026
No menu items!

சட்டத்தரணி

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனு விசாரணைக்கு!

தென் கொரிய விசா சம்பவத்தில் தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனு ஜூன் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சட்ட மா அதிபர் சார்பில்...

சிறுவர்கள் தொடர்பாக 8,746 முறைப்பாடுகள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 580 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பானவை எனவும், 321 முறைப்பாடுகள் சிறுவர் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை எனவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் சிறுவர்களின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக 2,746 முறைப்பாடுகளும்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல உரிமை ஆகும்; நாமல் ராஜபக்ஷ!

எந்தவித பாதுகாப்பு முன்னாயத்தமும் இன்றியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இதுவொரு அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்...

மனுஷ நாணயக்கார CIDயில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளார். தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணைக்கோரி முன்னாள் அமைச்சர்...

இலங்கை நிதியமைச்சரின் கருத்துக்கு யோதிலிங்கம் கண்டனம்..!

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு  அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சியாஜோதிலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று அவர் யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்  கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் இலங்கை நீதி அமைச்சர்...

மனித புதைகுழிகள் விவகாரம் – நீதிமன்றில் விசாரணை : தொடரும் மர்மம்..!

மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (9/1/2025) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், முதலில் மன்னார் சதோச  மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது...

தவறவிட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவருக்கு நேர்ந்த கதி..!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம்  ஒன்றுக்கு...

மைத்ரிபாலவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு..!

நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இணக்கப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான மொண்டெகு சரத்சந்ரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு முன்னாள்...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிலிருந்து ஹிருணிகா பிரேமச்சந்திர விடுதலை..!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (04.12.2024) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img