Thursday, November 12, 2026
No menu items!

சந்தை

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை;  ஜனாதிபதி!

சில சந்தைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அரிசி கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சில விற்பனை நிலையங்களில் பங்குச் சிக்கல்கள் ஏற்பட்டாலும், நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஒத்துழைக்க அரசாங்கம்...

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சந்தைக்கு முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ? அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில்...

அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் !

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும்...

அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

அரிசி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் தொடர்பில் சந்தையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அதிகரித்துள்ள தேங்காய் விலை!

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்து வருவதாகவும், சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கப்படுவதுடன் தேங்காய் ஒன்று 80 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனையாளர்கள் கொள்வனவு செய்வதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

வீழ்ச்சியடைந்துள்ள மரக்கறிகளின் விலைகள்!

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகள் வராத நிலை காணப்படுவதாக அந்த பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக சில மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் உள்ளதாகவும் அவை பழுதடைவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது சந்தையில் கோவா, கெக்கரிக்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய் மற்றும்...

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு!

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிசியின் விலையைக்...

அதிகரித்துள்ள அரிசியின் விலை!

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விலையை அதிகரித்துள்ளனர். இதன்படி, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய்...

தேங்காய் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் தேங்காய் ஒன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் தேங்காய் ஒன்று 90 ரூபாய் முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டது.  

சந்தையில் வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை!

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய தற்பொழுது 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேருக்கு குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை

ருவன்வெலி மஹா சாய அருகில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் இருக்கும் பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நாளை (13) கொழும்பு குற்றப்பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட...
- Advertisement -spot_img