Saturday, June 13, 2026
No menu items!

சிவஞானம் சிறீதரன்

மாவை.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் MP!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார். நேற்று முன் தினம், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு உயிரிழந்திருந்த நிலையில், வைத்தியசாலையின் நிருவாக நடைமுறைகளைப் பின்பற்றி இன்று அதிகாலை அவரது...

விரைவில் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு..!

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன். வெகு  விரைவில் இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14/01/2025) நடைபெற்றது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த...

இனப்பிரச்சனையை கிளீன் செய்ய வேண்டும் – சிறீதரன் தெரிவிப்பு..!

கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சனையையும் கிளீன் செய்ய வேண்டும் இந்த அரசாங்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (02.01.2024) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், மலர்ந்திருக்கும் புதுவருடம் இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சனையை  தீர்த்து வைக்கும் அவர்களின் இலக்கை அடையும் புதுவருடமாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு காலடி...

கனேடிய அமைச்சரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி, முடிக்குரிய சுதேசியக் குடிகள் விவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் ஜேமி பாடிஸ்டி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்செஸ்கோ சோர்பரா ஆகியோருக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கடந்த...

தேசிய இனப்பிரச்சினையின் தீர்வே நாட்டின் சுபீட்சத்துக்கு வழி – சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்..!

அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் உறுதிப்பாடடைந்த சுபீட்சம் மிக்க நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், கடந்த எண்பது ஆண்டுகளாக புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதொன்றே வழியாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். சுவிஸ் தூதரகத்தினால் அழைக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான...

அடக்குமுறைக்குட்படுவோர் இல்லாதிருக்க வேண்டுமென்றால், அடக்குமுறையாளர்கள் இருக்கக்கூடாது – சிறீதரன். எம்.பி..!

இலங்கைத்தீவில் அடக்குமுறைக்கு உட்படுகின்ற இனமொன்று இருக்க முடியாதெனில், அடக்குமுறையை மேற்கொள்பவர்களாக பெருந்தேசிய இனமும் இருக்கக் கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று (04.12.2024) ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன்...

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்..!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம் (29.11.2024) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட...

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரனுக்கான வரவேற்பு நிகழ்வு…

நான்காவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரனுக்கான வரவேற்பு நிகழ்வு நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளைத்தொடர்ந்து அலுவலகம் வரை கட்சி ஆதரவாளர்கள் மக்கள் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்றனர். தொடர்ந்து வரவேற்ற மக்களுடன் கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்!

இலங்கைத் தமிழரசு கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று காலை மாயவனூர் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்; சிவஞானம் சிறீதரன்..!

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் அவர்களை ஆதரித்து, நேற்றைய தினம் (06.11.2024)...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img