Sunday, November 8, 2026
No menu items!

ஜனாதிபதித் தேர்தல்

ரணிலுக்கு ஆதரவு: வெளியான அறிவிப்பு…

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க நீர்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார். மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக பவித்ரா வன்னியாராச்சி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

சஜித்தின் அரசாங்கத்தில் பிரதமர் யார்? இரண்டு பேர் கடும் போட்டி..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்று அமைக்கும் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினராக உள்ள லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு இடையில் இந்த போட்டி ஏற்பட்டுள்ளது. ரஞ்சித் மத்தும...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் சக்தியாக மாறும்: நாமலின் அழைப்பு..!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லையென்றாலும் கட்சியின் கோரிக்கையை ஏற்று கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று அழைப்பு விடுப்பதாக (07.08) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சி, ​​பொருத்தமான நபரை தெரிவு செய்து இருப்பதாகவும், இது தனது பொறுப்பாக...

தேர்தல் கமிஷன் தலைவர் தலைமையிலான கூட்டம் இன்று!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் அதிகாரிகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் தலைவர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. தற்போது நாட்டில் ஏழு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இயங்கி வருகின்றன. மேலும், தேர்தலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களின் தலைவர்களுடனான தனியான கலந்துரையாடலும் இன்று...

தமிழ்ப் பொதுவேட்பாளர் பெயர் விவரம் அறிவிப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொதுவேட்பாளர் யார்? என்ற விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 3 பேரின் பெயர்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

மகிந்தவின் மாத்தறை மாவட்ட சபை: ரணிலுக்கு ஆதரவு…

இடம்பெறவுள்ள தீர்மானமிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மகிந்த ராஜபக்சவை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து சாகர காரியவசத்தை நீக்கி அந்த பதவிக்கான பிரேரணையை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கும் யோசனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட...

கட்டுப்பணத்தை செலுத்திய விஜேதாச..!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் கட்டுப்பணத்தை விஜேதாச ராஜபக்ச எம்.பி செலுத்தியுள்ளார். இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.  

தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியோர்..!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதுவரை ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச மற்றும் பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர்…!!

சற்றுமுன் விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடந்த 25 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனில், அதன் அடிப்படையில் தேர்தல் மனுக்களை சமர்ப்பிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த விடயங்களில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வதாக ஜனாதிபதி சற்றுமுன்னர் சபாநாயகரிடம் அறிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img