Sunday, November 8, 2026
No menu items!

ஜனாதிபதித் தேர்தல்

ரணிலின் தலைமையின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என முறைப்பாடு..!

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ரணில் விக்கரமசிங்க மூலம் நிதி அமைச்சராக சுமார் 200 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இலங்கை மதுபான உரிமையாளர்களின் சங்கம் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அச்சங்கத்தின் உபதலைவர் பிரசன்ன விதானகே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, மதுவரித்...

கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு…!

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (14.08) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல், 16 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில்...

விசேட பாதுகாப்புக்கு உட்படுத்தப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்….!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 1,600 மில்லியன் ரூபா செலவாகும் என இலங்கை பொலிஸார், தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வேட்பாளருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்த சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகளின் படி, 15ஆம் திகதி  முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேவையான பாதுகாப்பினை அளவை...

பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை ரணிலுக்கு ஆதரவு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 8 பேரில் ஐந்து பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உள்ளூராட்சி நிறுவனங்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க உடன்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜானக...

கட்டுப்பணம் செலுத்திய ஜனாதிபதி வேட்பாளர்..!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவுக்கு இன்று (13.08) கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. திலித் ஜயவீர சார்பில் கலாநிதி ஜீ.வீரசிங்க கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான தொழிற்சங்கத்தின் குழுவினர் இதில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை: சந்திரிக்கா பண்டாரநாயக்க கருத்து..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள்...

அரசுடமையாகப்போகும் கட்டுப்பணம்..!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை (14.08) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. மேலும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில் செலவு செய்யும் பணமும் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. 1994 ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்...

நிறைவடையும் காலஎல்லை..!

ஜனாதிபதித் தேர்தல் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, காலஎல்லை இன்று(09.08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5ஆம் திகதியுடன் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, எந்தவொரு காரணத்திற்காகவும் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை..!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது அதற்கு சமமான வேறு ஆவணங்கள் இல்லாவிட்டால், அவ்வாறானவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிராம சேவை உத்தியோகத்தரிடம் இரு புகைப்படங்களுடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதனூடாக தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இது பொருந்துமெனவும்...

கட்டுப்பணம் செலுத்திய 24 வேட்பாளர்கள்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்களும், 12 சுயேட்சை வேட்பாளர்களும் மற்றும் பிற அரசியல் கட்சிகளில் இருந்து ஒரு வேட்பாளரும் என 24 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img