Monday, November 16, 2026
No menu items!

ஜனாதிபதி

மின் கட்டண சூத்திரத்தை திருத்துவதற்கான ஆய்வு ஆரம்பம்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தற்போதைய மின் கட்டண சூத்திரத்தை திருத்துவதற்கான ஆய்வு தொடங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் நுகர்வோருக்கு உகந்த மின்சார கட்டண முறையை அறிமுகப்படுத்துவதே இந்த திருத்தத்தின் நோக்கமாக உள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். புதிய வழிமுறை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மின்வலு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும். திருத்தப்பட்ட சூத்திரம் பின்னர்...

கொரிய குடியரசின் தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு!

கொரிய குடியரசின் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (09.10) ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பொன்றை மேற்கொண்டார். கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான தருணமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திப்பின் போது, ​​தூதுவர் லீ, ஜனாதிபதி திஸாநாயக்க பதவியேற்பு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், புதிய தலைமைத்துவத்தின்...

அத்தியாவசிய உணவுப் பொருள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்!

அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.இளமைநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, சந்தை நிலவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் பேரவையை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்!

ஜனநாயகத்தில் பங்கேற்பதை வலுப்படுத்துவதற்காக முன்னாள் ஆட்சியினால் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் பேரவையை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் சேவையை நிறுத்துவதற்கும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகத்தின் படி, 30-09-2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்படி அதிகாரிகளின் சேவைகளை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம்,...

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படவில்லை; நிஹால் தல்துவ!

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ விளக்கமளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு 50 விசேட அதிரடிப்படையினர் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தெளிவுபடுத்திய தல்துவா, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு Ex-PSD எனப்படும் விசேட...

மஹிந்த ராஜபக்ஷவின் முடிவிற்கு காத்திருக்கும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் முடிவிற்காக காத்திருக்கிறது . ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த சில நாட்களுக்குள் ராஜபக்சே தனது முடிவை எடுப்பார் என்றும், அது அறிவிக்கப்பட்டவுடன் அதன்படி செயல்படுவார்...

இலங்கையின் சுற்றுலா துறைகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க ADB இணக்கம்!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Takafumi Kadonoவை இன்று (07.10.2024) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கையின் சுற்றுலா, எரிசக்தி, மற்றும் சிறுதொழில் முயற்சி துறைகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி அறிந்துகொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் தற்போதுள்ள அனைத்து...

ரணிலின் பாதுகாப்பு நீக்கப்பட்டதா? பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு இன்று (7.10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரின் பாதுகாப்பிற்கு நிரந்தரமாக பொறுப்பேற்றிருந்த 307 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், தற்காலிக அடிப்படையில் 24 பேரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்; ஜனாதிபதி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன், நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருடன் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின்...

IMF குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் 2 வது நாளாக சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (04.10) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இந்தச் சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு இடம் பெற்று வருகின்றது.      
- Advertisement -spot_img

Latest News

ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) இயக்குநர் சபையால் எதிர்ப்பின்றி பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, ஜெய் ஷா இரண்டாவது முறையாக ஐ.சி.சிதலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஐ...
- Advertisement -spot_img