Sunday, November 15, 2026
No menu items!

தங்காலை

தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் 9 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்!

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 9 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த சங்கங்களின் 3 வருடப் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னரும் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படாமையும், சட்டத்திற்குப் புறம்பாக அதனை நடத்திச் சென்றமையும் இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, வெலிகம, தெவிநுவர, திக்வெல்ல, பெரலபனாதர, கொட்டபொல,...

அம்பாந்தோட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

அம்பாந்தோட்டை  - தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள...

மீண்டும் அத்தியவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும், பொருட்களுக்கான விலை குறைவடையவில்லை என்றும் இன்று பலர் முறைப்பாடுகளை...

தொடரும் நாட்டுத்துப்பாக்கி கொலைகள்…!

நேற்றிரவு (18) தங்காலை, நலகம, தெமட்டவெவ பகுதியில் உள்ள தென்னங்காணி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும், 33 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மாடுகளை பராமரிக்கும் உரிமையாளர் எனவும் நேற்றையதினம் மாலை 6.00 மணியளவில் மாடுகளை மீண்டும் அழைத்துவர சென்ற நிலையில் வீடு திரும்பாததை...

தங்காலை பிரதேசத்தில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழப்பு…!

தங்காலை பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 08 ஆம் திகதி தனது கடமைகளை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது...

கொழும்பு – வெல்லவாய வீதியில் விபத்து; பெண் ஒருவர் பலி…!

கொழும்பு - வெல்லவாய வீதியில் திக்வெல்ல நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த...

மற்றொரு மீனவரும் பலி..!

கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த மூன்று மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தங்காலையில் இருந்து 320 கடல்மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடி படகொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். குறித்த மீனவ படகு கரையை நோக்கி பயணிப்பதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய...

மொட்டு அணியினர் தங்காலையில் ஒன்றுகூடவுள்ளனர்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மாநாடு இன்று (30) தங்காலை நகரில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும்...

எம்பிலிப்பிட்டியவில் பாலம் உடைந்து விபத்து

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போது குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதேவேளை பாலம் இடிந்ததால் பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளதாகவும் இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை...

 புதையல் தோண்டிய மூவர் கைது

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த மூவரை  பொலிஸார் இன்று(29) காலை கைது செய்துள்ளனர். தங்காலை பிரதேசத்தை சேர்ந்த கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தர், ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் மற்றும் மதவெல பிரதேசத்தை சேர்ந்த மேசன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தருக்கு சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு புதையல்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு லாஃப்ஸ் நிறுவன நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு

சமீபத்திய எரிவாயு தட்டுப்பாட்டுக்காக நுகர்வோரிடம் லாஃப்ஸ் (LAUGFS Gas PLC) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளிந்த குருகுலசூரிய மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, 12.5 கிலோ சிலிண்டரின்...
- Advertisement -spot_img