Saturday, June 13, 2026
No menu items!

துப்பாக்கிச்சூடு

நீதிமன்ற துப்பாக்கிச்சூடு குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த உளவுத்துறை..!

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். எனினும் இதை தடுக்க தவறியதால் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நீதிமன்ற அறைக்குள் துப்பாக்கிதாரியை கடத்த உதவிய பெண்...

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்..!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை (24-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் திங்கட்கிழமை (10.02.2025) உத்தரவிட்டார். 7 சந்தேக நபர்களில்  ஏற்கனவே    5 சந்தேக நபர்கள் அடையாள அணி...

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மேலும் ஒருவர் கைது..!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02/02/2025) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வசிப்பவர் ஆவார். இந்நிலையில்...

சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு..!

ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் பயணித்த இருவர் டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 40 தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், குறித்த வீட்டை அண்மித்த இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஜா-எல காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை மாணவியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு – இருவர் பலி..!

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள அபண்டண்ட் லைஃப் கிறிஸ்தவப் பாடசாலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மாணவி கண்மூடித்தனமாக சுட்டதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பாடசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார்...

கொழும்பு, தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு…!

கொழும்பு, தாமரை கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வெள்ளிக்கிழமை (08.11.2024) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரேசிலின் சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு…!

பிரேசிலின் மிகப்பெரிய விமான நிலையமான சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு மகிழுந்தில் வந்த சிலர், திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை...

மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பாடசாலையொன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நேற்று 14 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு ஆசிரியர்கள் மற்றும் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 30இற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை...

மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு!

மணல் ஏற்றியவாறு நிறுத்தாது பயணித்த டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நிறுத்தாமல் பயணித்த நிலையில் குடமுருட்டி பகுதியில் வைத்து பொலிசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, சாரதிக்கு உதவியாக பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலப் பகுதியில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img