Wednesday, November 18, 2026
No menu items!

துப்பாக்கிச் சூடு

மனைவி மற்றும் பிள்ளையின் கண் முன் சுட்டுக்கொள்ளப்பட்ட நபர்..!

மீகொட - நாகஹவத்த பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் பயணித்த குறித்த நபரை இலக்கு வைத்து, நேற்று சனிக்கிழமை  (14.12.2024) இரவு  அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்தரமுல்ல செத்சிரிபாயவில் உள்ள சமுர்த்தி பிரதான காரியாலயத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய 32 வயதுடைய  ஒரு பிள்ளையின் தந்தையே...

இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு..!

மாளிகாகந்த பிரதேசத்தில் இன்று (14.12.2024) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவருகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு 

மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (31) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், வர்த்தகரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இரத்தினபுரியில் துப்பாக்கிச் சூடு…!

இரத்தினபுரி மாரப்பன தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (26.10.2024) அதிகாலை 02 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, குழந்தை மற்றும் அவரது பெற்றோர்கள் அங்கு இருந்துள்ள நிலையில், அவர்களில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. வீட்டின் உரிமையாளர்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்  கனடாவில் சுட்டுக்கொலை!

கனடாவில் பணிபுரிந்து வந்த யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டை...

கிராண்ட்பாஸ் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

கொழும்பு கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய பிரதேசத்தில் இன்று (16) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 35 வயது நபரொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய மீன் வியாபாரி….!

இன்று (19)காலை மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியான பிரதேசத்தில் உள்ள மீன் விற்பனை செய்யும் நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த மீன் விற்பனை செய்யும் நபரும், அங்கு மீன் கொள்வனவு செய்ய வந்த மீன் வியாபாரி...

அமெரிக்காவில்  துப்பாக்கிச்சூடு நால்வர் பலி..!

அமெரிக்கா, சிகாகோ சுரங்கப்பாதை ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்காகிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும், இத்தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.  

முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…!

குரோஷியா எனும் நாட்டின் தாருவார் நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த முதியோர் இல்லத்துக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் உணவு விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்களில்...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு…!!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இண்டியோனாலா நகரில் உள்ள இரவு விடுதிக்கு அருகே ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்க தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் இன்று (18) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் பொதுவான...
- Advertisement -spot_img