காலி, உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகிரல பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

உரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடகிரல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து, 2 வெளிநாட்டுத் துப்பாக்கிகள் , 2 உள்நாட்டுத் துப்பாக்கிகள் , 10 தோட்டாக்கள் மற்றும் 2,500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here