Friday, July 17, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து; நளிந்த ஜயதிஸ்ஸ!

ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் புதிய அஞ்சல் காரியாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த 30 வருடங்களாக அரச சொத்துக்களையும், இடங்களையும், அனுபவித்து வந்த தலைவர்கள், தற்போதே அவர்களுடைய...

அரசியல் தலைவர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு!

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்கள் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டையடுத்து, குறிப்பாக அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துகள் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் மக்களிடையிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு, எதிர்மறை கருத்துக்களும்...

நாமல் ராஜபக்சவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எக்ஸ் பதிவொன்றில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்திப்பு நடந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்...

தமது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்கிறார் – தந்தை குறித்து நாமல் ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள கருத்து!

தமது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த தங்காலையில் மீண்டும் தனது அடுத்தடுத்த வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டு செல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விஜேராம இல்லத்தில் இருந்து இன்று மஹிந்த ராஜபக்‌ஷ வெளியேறியதை அடுத்து, தனது சமூக ஊடகங்களில் பதிவிட்ட நாமல் ராஜபக்‌ஷ, “தாய் நாட்டின் மக்கள் மீது அவர்...

பொதுமக்களுக்காக மீண்டும்  திறக்கப்படும் நாடாளுமன்ற மைதானம்!

நாடாளுமன்ற மைதானத்தை பொதுமக்களுக்கு மீண்டும் திறக்க நாடாளுமன்ற பாதுகாப்பு பேரவை முடிவு செய்ததாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(09.09.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் தலைமையில் நேற்றையதினம் கூடிய நாடாளுமன்ற பாதுகாப்பு பேரவை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் நாடாளுமன்ற மைதானத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் பூர்வாங்க...

வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட விவசாய பாதிப்பை ஆராய குழுவொன்று அமைக்க வேண்டும் – எம்.பி. சிறிதரன்!

பெரும்போக விவசாயத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த 2025 பெப்ரவரி மாதம் உள்ளிட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 83,252 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டதுடன், 70,540 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். எனினும், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை நட்டஈடு...

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – விஜித ஹேரத்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரனால் இன்று...

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறும் புதிய வாய்ப்பு!

நீண்டகாலமாக இருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் இனி ஓட்டுநர் உரிமம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்தார். அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், கேட்கும் திறன் குறைபாடு, பேச்சு குறைபாடு மற்றும் பகுதியளவு பார்வை திறன் கொண்டவர்கள் புதிய...

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி அழுத்தம்!

பத்து ஆண்டுகளாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் இதுகுறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் பல மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. இதனை விரைவில் நடத்த...

தமிழ்–முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் செய்ய முடியாது – சாணக்கியன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(06.08) திங்கட்கிழமை இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, அவர் உரையாற்றி இவ்வாறு கருத்து வெளியிட்டார். இரு சமூகங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், வெளிப்படையான அரசியல் உந்துதல்களால் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img