Tuesday, May 19, 2026
No menu items!

நாமல் ராஜபக்ஷ

அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறது – நாமல் குற்றச்சாட்டு!

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர், தற்போது இடம்பெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான பதில்களைத் தூண்டவும், பொது மக்களின் உணர்வுகளைக் கையாளவும் அரசாங்கம்...

பிள்ளையான் குறித்து நாமலின் கவலைக்கான காரணம் விரைவில் வெளியாகும் – நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயம் தொடர்பில் விசாரணைக் குழு உரிய முறையில் விசாரணைகளை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம்...

மகிந்தவின் ஆட்சி காலத்திலேயே கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடைந்தது – நாமல் எம்.பி!

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம். தற்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைபட்டுள்ளன. விசேடமாக  திருகோணமலை மாவட்டத்திற்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மூதூர் தொகுதிக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன...

ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை புது டெல்லியில் நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025 இல் உரையாற்றினார். அவர் தெற்காசிய தட்டு வளர்ச்சிக்கான மெனு என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் பங்கேற்றார். ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025 பிராந்திய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களின் பங்கேற்பைக் கொண்டுள்ளது. இந்தியப் பிரதமர்...

இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் உரையாற்றவுள்ள நாமல்..!

இந்தியாவில் நடைபெறும் 'ரைசிங் பாரதம்' மாநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (4/8/2025) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார். தெற்காசிய பிராந்தியத்திற்கான வளர்ச்சிக்கான பட்டியல் (The South Asian Platter: Menu for Growth) என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறுகின்றது. வளர்ந்து வரும் இளம் தலைவர்களின் கண்ணோட்டத்தில் பிராந்திய வளர்ச்சியை ஆராய்வதை...

CIDயிலிருந்து வெளியேறிய நாமல்..!

இன்று (4/7/2025) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியிருந்தார்.

CID முன்னிலையில் நாமல் ராஜபக்ஷ!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்தார்.

அநுரகுமார வரலாற்றில் அதிக பொய்களை கூறிய தலைவர் – நாமல் தெரிவிப்பு!

தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் அமைச்சர் ஒரு கருத்தை தெரிவிக்க, விமானப்படை வேறு கருத்தை கூறுகிறது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது தெளிவாக புலப்படுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய...

2029 இல் ஆட்சியை கைப்பற்றுவோம் – நாமல் உறுதி..!

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அதிகளவான சபைகளை எம்மால் கைப்பற்ற முடியும்....

மஹிந்த அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டிய நாமல்..!

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்கள் எடுத்தது இதுபோன்ற போன்ற தவறான முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுக்கக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து...
- Advertisement -spot_img

Latest News

140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதை பொருள் பறிமுதல்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பயணிகள் இருவரிடம் இருந்து 14.562 கிலோ குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட குறித்த குஷ் போதைப்பொருளின் சந்தை மதிப்பு...
- Advertisement -spot_img