Wednesday, July 29, 2026
No menu items!

நீதிமன்றம்

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து வியாழேந்திரன் பிணையில் விடுதலை..!

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தமையைத் தொடர்ந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி தனுஜா லக்மாலி பிணையில் விடுவிக்குமாறு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார். எனினும் பிணை நிபந்தனைகளை முறையாகப் பூர்த்தி செய்யாமையின் காரணமாக அவர் மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டார். கையூட்டல் பெறுவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில்...

காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு – சடலத்தைத் தோண்டி எடுக்க உத்தரவு!

வெலிக்கடை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சடலத்தை மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி, அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரின்...

நீதிமன்றத்திலிருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் – பொலிஸார் மடக்கி பிடிப்பு!

கல்முனை நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபரை வியாழக்கிழமை (20/03/2025) இரவு  நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்டம் - நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பளம் பகுதியில் ஆடு திருடிய இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை (13/03/2025) கல்முனை...

பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் கசிப்பு மற்றும் கோடா மீட்பு..! 

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதில் 06 பரள்களில் கோடா, கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று...

காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும் ; ஜீவன் தொண்டமான்!

கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன....

தேசபந்து தென்னகோனை தேடுவதற்காக நான்கு விசாரணைக் குழுக்கள் நியமிப்பு!

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள காவல்துறை குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. நேற்று முதல்...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வெளிநாட்டு பயணத் தடை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் இருவருக்கு மஹர நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு விசேட அறிவிப்பு!

இன்று (17) முதல் 21 ஆம் தேதி வரை சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு எதிராக நீதிமன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கூறிய சில நாட்களில் வெலிக்கடை, பொல்துவ சுற்றுவட்டத்தில் இந்தக் குழு போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி செய்யப்பட்ட...

இரட்டைக் கொலை சம்பவம்- நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி..!

மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் இரு பெண்களை கொலை செய்தது, அவர்களது 15 வயது நிரம்பிய பேத்தி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் இருவரும் இன்னும் இரு பேரன்களை நன்றாக கவனிப்பதாக கூறி, அவர் இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் வீடு ஒன்றில் இரு சகோதரிகள் நேற்று (14)...

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன்; காவல்துறை பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து 11 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகம - பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறை...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img