Tuesday, November 10, 2026
No menu items!

நீதிமன்றம்

டிக்டொக் காதலியை காணச்சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

திருகோணமலை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுக்கும் பசுமலை பிரதேசத்தில் உள்ள மாணவிக்கும் டிக்டொக் மூலம் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து குறித்த இளைஞன் தனது காதலியை தேடி பசுமலை பிரதேசத்துக்கு வருகை தந்து மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளான். சம்பவம் குறித்து  பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்றைய...

அமெரிக்காவில் டிக்டொக் செயலி நாளை முதல் தடை..!

அமெரிக்காவில் டிக்டொக் செயலி நாளை முதல் தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டொக் செயலிக்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டத்தின்படி, நாளைய தினத்திற்குள் அந்த செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யாவிட்டால் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டொக் செயலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில்...

அதானி ஒப்பந்தம் தொடர்பில்  நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குறித்த மனுவை இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன தாக்கல்...

சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!

இராஜகிரிய பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு வீதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) அனுமதி அளித்துள்ளது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தனிப்பட்ட விஷயத்திற்காக...

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இளைஞனுக்கு ஆயுள் தண்டனை!

சிறைச்சாலைக்குள் 25 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் மஞ்சுள திலகரத்ன இன்று பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தனது நண்பருக்காக எடுத்துச் சென்ற உணவுப் பாத்திரத்தில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்தார். எவ்வாறாயினும்,...

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (10.01.2025) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் இராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை...

காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு பிணை..!

கண்டி பல்லேகெலேவில் நடைபெற்ற லங்கா T-10 கிரிக்கெட் போட்டித் தொடரின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின...

மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி…!

கொழும்பில் உள்ள ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் நேற்று (டிசம்பர் 19) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த...

யாழ். மக்களுக்கு மற்றுமொரு அச்சுறுத்தல்..!

கொழும்பு, கண்டி, காலி மற்றும் வட மாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். சமீபத்திய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண பிரதேசத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு சென்றுள்ளது....

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் லொஹான் ரத்வத்த..!

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (07.12.2024) விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரை வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை; ஹட்டன் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...
- Advertisement -spot_img