நிட்டம்புவ – கிரிந்திவெல பிரதான வீதியில் இன்று (4/21/2025) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிர் திசையிலிருந்து வந்த பாரவூர்தியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் 20 பேர் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வைத்தியசாலையிருந்து வெளியேறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.







