Friday, November 13, 2026
No menu items!

பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் குழுவின் தலைவராக பிரதமர் நியமனம்!

பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் குழுவின் தலைவராக பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹரிணி அமரசூரியவின் பெயரை முன்மொழிவதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு..!

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (20/02/2025) நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் நீண்ட கால உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க...

மாலைதீவு வெளியுறவு அமைச்சர்  இலங்கைக்கு விஜயம்!

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​மாலைதீவு வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். கலீல், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்துவார். அவருடன் மாலத்தீவின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனயாவும்...

மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு – பிரதமர் தெரிவிப்பு..!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் அமைந்துள்ள சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தி தொடர் திட்டம் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வினை உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், நாளைய...

யாழில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் பிரதமரிடம் மக்கள் கேள்வி!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் விடுவிக்கப்படாத வலிகாமம் வடக்கு காணிகள் தொடர்பாகக் காணி உரிமையாளர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பியதால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு ஏழாலை ஏழு கோவிலடியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று மாலை மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. பிரதமர் ஹரிணி அமரசூரிய தேசிய...

யாழ். மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய..!

யாழ். மானிப்பாய் தொகுதி, சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றையதினம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 6 மணிக்கு யாழ்.மானிப்பாய் தொகுதி, சண்டிலிப்பாய் வடக்கு, பிள்ளையார் கோவில் அருகாமையில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். குறித்த கூட்டத்தில்...

பிரதமரால் புனரமைக்கப்பட்ட நூலகம் திறந்து வைப்பு..!

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இன்று மதியம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்தார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஶ்ரீபவானந்தராஜா , றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர்க கலாசாலை அதிபர் லலீசன் மற்றும் கல்வி திணைக்கள...

யாழ். இந்துக் கல்லூரிக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய திடீர் விஜயம்..!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (2/15/2025) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டார். கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார். இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு பாடசாலை...

அழகான கடற்கரை திட்டம் இன்று ஆரம்பம்..!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அழகான கடற்கரையுடன் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலத்தை உருவாக்கும் நிகழ்வு இன்று (09/02/2025) காலை 8.00மணிக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. அரச, தனியார், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்வு மட்டக்குளி காக்கை தீவு கடற்கரையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வளமான நாடு அழகான...

பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய அனுமதி!

மொரட்டுவை, பேராதனை, பௌத்த மற்றும் பாலி, சப்ரகமுவ, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களில் நிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. COVID-19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட திட்டங்களில் குடியிருப்பு வசதிகள், சிற்றூண்டிச்சாலை மற்றும் பொது வசதிகள் ஆகியவை அடங்கும். கல்வி, உயர்கல்வி மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img