Saturday, June 13, 2026
No menu items!

பெருந்தோட்டத் தொழிலாளர்

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து…!

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700  ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.  

சம்பள முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான்…!

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் 1,700 ரூபா  சம்பளத்துக்கு பதிலாக 1,350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் நேற்று உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக மறுப்பை வெளியிட்டு வருகிறது....

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பான இணக்கப்பாடு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம்  மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு நேற்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை   அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்து அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...

வர்த்தமானி அறிக்கையின் படி சம்பளமாக 1,700 ரூபாய் கிடைத்தால் மகிழ்ச்சி….!

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக...

சம்பள பேச்சுவார்த்தைக்கு செல்லாத பெருந்தோட்ட நிறுவனங்கள்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாக இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையிலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. இதற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான இன்றைய பேச்சுவார்த்தை நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் அமைச்சில் நடைபெறவிருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்காக தொழில் ஆணையாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

தொழில் ஆணையாளர் நாயகத்தால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த அறிவித்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img