பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாக இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையிலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

இதற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான இன்றைய பேச்சுவார்த்தை நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் அமைச்சில் நடைபெறவிருந்தது.

இந்த பேச்சுவார்த்தைக்காக தொழில் ஆணையாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்டோர் வருகை தந்திருந்த போதிலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் எவரும் இதன்போது சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here