Thursday, November 12, 2026
No menu items!

பொதுத் தேர்தல்

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அங்கீகரிக்கப்பட்ட 84 அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுதவிர, சுயேட்சை குழுக்கள் சார்பிலும் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஒரு கட்சியின் சார்பில் மாவட்ட ரீதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் எண்ணிக்கை தொடர்பில், எதிர்வரும் நாட்களில்...

பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலத்தினை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் மொட்டுக் கட்சி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றை அடுத்து ஊடகங்களுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் நிலைப்பாடு வாக்குகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். யாருக்கு ஆதரவளிப்பது...

பாராளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும்!

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அவர் உட்பட நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி திஸாநாயக்க சுற்றுலா,...

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!!

எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை வௌிட்டுள்ளார். இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு !!!

எதிர்வரும், ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பிறகு உடனடியாகவே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்தலை அறிவிப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என அவர் அமைச்சரவை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொட்டு கட்சிக்காக செயல்படும் ரணில்! சரத் பொன்சேகா குற்றச்சாட்டு..!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அரசியல் வட்டாரத்தில் செல்லுபடியாகாத நாணயமாக திகழும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்புக்களை முன்னெடுப்பது அர்த்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் எந்த தேர்தலை...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img