Friday, November 13, 2026
No menu items!

போக்குவரத்து

வழமைக்கு திரும்பியுள்ள ஏ9 வீதி !

சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமோட்டை மற்றும் ஓமந்தை நகரம் ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவில் வெள்ள நீர் வழிந்தோடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வெள்ள நீர் குறைவடைந்துள்ளதால் யாழ்ப்பாணம் ஏ9...

கொழும்பைச் சுற்றியுள்ள பல பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் !

கொழும்பைச் சுற்றியுள்ள பல பிரதான வீதிகளில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடும் மழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பொரளை, நகர மண்டபம், ஹோர்டன் பிளேஸ், தும்முல்ல போன்ற பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்கழு மேலும் தெரிவிக்கையில், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு நடந்து அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாத விசேட தேவையுடைய...

ஆபத்தான நிலையில் காணப்படும் முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள பாலம்…!

முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் மற்றும் புளியம்பொக்கனை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத வர்ணமிடப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் பாலம் கடந்த 2009 ஆம்...

துண்டிக்கப்பட்ட மேல் மற்றும் தென் மாகாணங்களின் போக்குவரத்து…!

மேல் மற்றும் தென் மாகாணங்களில், வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, பண்டாரகம - கொலமதிரிய, பாலிந்தநுவர - பதுரலிய, பரல்லாவிட்ட - அவிட்டாவ, களுத்துறை - மத்துகம, புலத்சிங்கள - மொல்கா ஆகிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் மினுவாங்கொடை,...

வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் மாயம்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு - அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடுவெல வெலி - போதிய பகுதிக்கு அருகில் ஒருவர் கால்வாயில் விழுந்து காணாமல் போயுள்ளார். நவகமுவ காவல்துறையினர் அவரை தேடும் நடவடிக்கையை...

துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை பணி முடிக்க திட்டம்!

துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரகம் அறிவித்துள்ளது. ஏறக்குறைய 90% கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 2019 செப்டம்பரில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது மொத்த செலவில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5.3 கிலோமீற்றர்...

கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

மாத்தளை பிரதேசத்தில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு நீதி கோரி இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர் நண்பர்களுடன் நண்பனின் காதலியைச் சந்திக்கச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று சிறுவர்களும் சிறுமியின் தந்தை உட்பட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதில்  17 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த கொலை தொடர்பாக...

போதியளவு பேருந்துகள் இல்லாமல் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ள பொது மக்கள் மீண்டும் கொழும்பிற்குத் திரும்புவதற்குப் போதியளவு பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர். ஹட்டன் உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள பல பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதாக செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று பிற்பகலுக்குள் அதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத்...

போக்குவரத்துக் குற்றங்களுக்கான ஒருங்கிணைந்த மின்னணு முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லாத போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை முறைப்படுத்தவும், போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்கு சாரதியினர் எதிர்மறைக் குறியிடும் முறையை நடைமுறைப்படுத்தவும் ஒருங்கிணைந்த மின்னணு முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சியானது அபராதம் வசூலிப்பதிலும், போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துவதிலும் செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்தமான விநியோகர்களை தேர்ந்தெடுப்பதற்கு இரட்டை உறை அமைப்பு மூலம்...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img