Close-up shot of a multiracial male criminal holding a bag of drugs while wearing handcuffs. He is being arrested by the a policeman.

யாழ்ப்பாணத்தில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் செயல்படும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்று வந்த வேளையில், சந்தேகநபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் கொழும்பைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணைகள் முடிந்தவுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here