Tuesday, June 30, 2026
No menu items!

மின்சாரம்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!

அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லவெடிய பகுதியில் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10/04/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார். இவர் புல்வெட்டும் இயந்திரத்தைப் பராமரித்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட பின்னர்...

சூரிய மின் அலகுகளின் விலை தொடர்பில் அரசாங்கம் தீர்மானம்!

கூரை சூரிய மின் தகடுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு செலுத்தப்படும் தொகையை திருத்தியமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மின்சார சபையின் பரிந்துரைகளுக்கு இணங்க, தொடர்புடைய திருத்தங்களைச் செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கூரைகளில் பொருத்தப்பட்ட சூரிய மின் தகடுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு செலுத்தப்படும் விலைகள் எதிர்காலத்தில் திருத்தப்பட்டு, உற்பத்தி...

உயிரிழந்த நிலையில் யானை மீட்பு – காணியின் உரிமையாளர் கைது..!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாங்குளி கிராமத்தில் உள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானை ஒன்று நேற்று புதன்கிழமை (19/03/2025) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யானை 18 வயதுடையது என தெரியவந்துள்ளது. நேற்று புதன்கிழமை (19/03/2025) அப்பகுதிக்குச் சென்றவர்கள் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை அவதானித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு...

மின்சாரத்தில் இயங்கும் CLA ரக வாகனம் அறிமுகம்!

மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் CLA ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 792கிமீ வரை பயணிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் Tesla Model 3, Polestar 2, 2026 BMW i3 Neue Klasse ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில்...

மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியை திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி..!

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியை திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (13/03/2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள மக்கெய்சர் விளையாட்டரங்கின் மூலையில் உள்ள மின் பிறப்பாக்கியில் புவித்தொடுப்பு வயரில் இருந்த செப்புக் கம்பியை வெட்டி திருட...

மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் உயிரிழப்பு!

சூரியவெவ ரண்தியகம வீரியகம பகுதியில் மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் 38 வயதுடைய தாயும் அவரது 5 வயது மகனும் என தெரியவருகிறது . நேற்று (05) பிற்பகல் 2.30 அளவில், 5 வயதுடைய சிறுவன், வீட்டின் பின்புறம் கட்டப்பட்டுள்ள வெதுப்பகத்தின் பாதுகாப்புக்காவும் , நிறுத்தப்பட்டிருந்த சிறிய...

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு..!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  மணியம்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்வயலுக்கு போடப்பட்ட மின்குமிழ் வயர், நெல் அறுவடை செய்த பின்பு வயலுக்கு வைக்கப்பட்ட நெருப்பின் மூலம் வயர் அறுந்த நிலையில் குறித்த மின்சாரம் தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. குறித்த...

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!

பெப்ரவரி 16 ஆம் திகதி இரவு செட்டிப்லாமில் உள்ள ஒரு வீட்டில் மின்சார மின்குமிழ்களைக் கையாளும் போது 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். வேலணை கிழக்கில் வசிக்கும் இந்தக் குழந்தை, வேலணை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

மீண்டும் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு !

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில்...

மின்சாரம் இல்லாமல் அவதியுறும் மக்கள் – அதிகாரிகள் அசமந்தம்..!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்லடிவெட்டை, கானாந்தனை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள  சில  கிராமங்களுக்கு செல்லும் அதிஉயர் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்ததனால்  மின்சார கம்பிகள், அறுந்து நிலத்தில் கிடப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக பொது மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த 2024...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img