Thursday, November 12, 2026
No menu items!

முட்டை

முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க  திட்டம்!

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். உற்பத்திச் செலவு அதிகமாகியுள்ள நிலையில், கோழிகளுக்குத் தீவனம்...

அதிகரித்துள்ள முட்டை விலை!

அண்மையில் முட்டை ஒன்றின் விலை குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது மீண்டும் முட்டை விலை 45 ரூபாயை கடந்துள்ளது. சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முட்டை...

முட்டையின் விலையில் அதிகரிப்பு!

சமீபகாலமாக விலை குறைந்ததையடுத்து முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. முட்டை ஒன்றின் விலை ரூ.2 ஆகக் குறைந்து காணப்பட்டது. 30க்கு சமீபகாலமாக உள்ளூர் சந்தைகளில் முட்டை ஒன்று ரூ.10க்கு மேல் விற்கப்படுவதாக தகவல் வெளியானது. இந்த வாரம் ரூ.40 ஆக விற்கப்படுகிறது. இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறுகையில், விலையேற்றத்திற்கு பல காரணிகள்...

மீண்டும் உயர்ந்த முட்டையின் விலை..!

தற்போது நாட்டின் பல இடங்களில் முட்டைகளின் சில்லறை விலை 40 ரூபாவாகவும் சில பகுதிகளில், 45 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன், முட்டையின் விலை 30 ரூபாய்க்கும் குறைவாக இருந்துள்ளது. முட்டை உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில்...

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க கோரிக்கை !

முட்டையின் விலை குறைவடைந்துள்ள நிலையில், அதன் பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு வெதுப்பக உற்பத்தியாளர்களிடம் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன எமது செய்திச் சேவைக்கு கருத்துரைக்கும் போதே இந்த கோரிக்கையினை விடுத்தார்.  சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில், அதன் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு அகில இலங்கை...

ஒரு மாதத்திற்கு தினமும் முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஒரு மாதத்திற்கு தினமும் முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? தினமும் முட்டை சாப்பிடுவது நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் ஏற்படுத்தும். தினமும் முட்டை சாப்பிடுவதன் நன்மைகள்…..! முட்டை உயர்தர புரதத்தை வழங்குகிறது, இது தசைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு அவசியம். முட்டையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன,...

முட்டை இறக்குமதி குறித்து இன்று இறுதி தீர்மானம்!

இன்று (22.07) முதல் ஒரு முட்டை 42 ரூபாய்க்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை இறக்குமதி தொடர்பில் நாளை கலந்துரையாடல்…!!

முட்டை இறக்குமதி தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் முட்டை உற்பத்தியாளர்களால் முட்டை விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (22.07) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோழி இறைச்சி சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை..!

இலங்கையில்  கோழி இறைச்சி சமைக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கோழி மற்றும் முட்டையை சுகாதார முறைப்படி நன்கு சமைத்து உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் பரவிய பறவைக் காய்ச்சல் குறித்து சுகாதார அமைச்சகம் கவனம் செலுத்திய நிலையில், சுகாதார அமைச்சகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இது தொடர்பான...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேருக்கு குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை

ருவன்வெலி மஹா சாய அருகில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் இருக்கும் பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நாளை (13) கொழும்பு குற்றப்பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட...
- Advertisement -spot_img