Tuesday, June 9, 2026
No menu items!

முன்னாள் அமைச்சர்கள்

அரச காணியை குடும்ப சொத்தாக்கிய முன்னாள் அமைச்சர்கள்; அமைச்சர் அரவிந்த சேனாரத்ன !

காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள், தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்குப் அரசாங்க நிலங்களை பகிர்ந்தளித்ததாக பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சில முன்னாள் அமைச்சர்கள் தனிப்பட்ட இரத்தினக் கல் அகழ்வு (Gem Mining) நடவடிக்கைகளுக்காகக் காணிகளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் வெளியிடத் தெரிவித்தார். 1972 ஆம் ஆண்டின்...

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்கள் அரச பயன்பாட்டிற்காக!

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 50 உத்தியோகபூர்வ இல்லங்களை எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் அல்லது பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும்...

முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரிப்பு!

அண்மைய காலங்களில் நடந்த 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. குற்றப்பத்திரிகைகளைத் தயாரிப்பதில் விசேட குழுவொன்று தற்போது ஈடுபட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளவர்களில் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் – பாதுகாப்பு அமைச்சரின் தகவல்!

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

பெரிய மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய திட்டம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், எதிர்காலத்தில் 15 பெரிய மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் முன்னர் ஆய்வு செய்யப்படாத புகார்களின் முழுமையான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று ஆணையம் வெளிப்படுத்தியது. இந்த கோப்புகளை மதிப்பாய்வு செய்ததன் மூலம் முறையான குற்றச்சாட்டுகளைத் தொடர முடிவு...

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது CID விசாரணை..!

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பெற்ற நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 2008 மற்றும் 2024 வரையில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 மக்கள் பிரதிநிதிகளிடம்...

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் முன்னாள் அமைச்சர்கள்-விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமா?

பாரிய நிதி மோசடி மற்றும் கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஐந்து முன்னாள் அமைச்சர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஐந்து பேர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல்...

அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் அரசிடம் கையளிப்பு..!

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அமைச்சர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்குமாறு எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என அந்தச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேரிடம் இருந்து உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றச் செயலாளர்...

நான்கு முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை!

முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த நான்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குடியிருப்புகளை முன்னாள் அமைச்சர்களான சனத் நிஷாந்த, மொஹான் டி சில்வா, ஆர்.சம்பந்தன், மற்றும் அஜித் ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்தியதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மொஹான் டி சில்வாவின் உத்தியோகபூர்வ இல்லம் இன்று கையளிக்கப்பட உள்ளதாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள்...

தேசிய பட்டியல் பிரச்சினையால் கட்சிகளுக்குள் பிளவு?

முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதனால், கட்சிகள் வீழ்ச்சியடையும் அளவுக்கு கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பட்டியல்களுக்கு கட்சித் தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிலரைக் கடுமையாக விமர்சிப்பதாலேயே, இந்த மோதல்கள் அதிகரிக்க காரணம் எனவும், அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. தேசிய...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img