காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள், தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்குப் அரசாங்க நிலங்களை பகிர்ந்தளித்ததாக பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சில முன்னாள் அமைச்சர்கள் தனிப்பட்ட இரத்தினக் கல் அகழ்வு (Gem Mining) நடவடிக்கைகளுக்காகக் காணிகளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் வெளியிடத் தெரிவித்தார்.

1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்தச் சட்டம் இலக்கம் 1 (Land Reforms Act No. 1 of 1972) உடன் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் முறையாக அளவிடப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “1972 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் எவ்வளவு ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்பது யாருக்கும் சரியாக தெரியாது”.என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here