Saturday, November 7, 2026
No menu items!

முல்லைத்தீவு

மின்னல் தாக்கம் ஏற்படும் மாவட்டங்கள்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன்படி ,வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை..!

அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான  பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் , மன்னார்...

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை..!

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை...

நாயாறு கடற்பரப்பில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நீரில் மூழ்கிக் காணாமல் போன ஆசிரியை ஒருவரும் 17 வயது மாணவர் ஒருவரும் காப்பாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவராவார். புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற ஆசிரியர், மாணவர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகல் நாயாறு...

கடமைகளை பொறுப்பேற்ற முல்லைத்தீவு மாவட்ட புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்..!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று (3/27/2025) பொறுப்பேற்றார். இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் பொறுப்பேற்றார். ஏற்கனவே கடமையாற்றிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் சமந்த டீ சில்வா பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெ.ஏ சந்திரசேன கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா...

ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் மீட்பு..!

T-56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சிலாவத்தை, தியோநகர் பகுதியில் இவை கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்ட தேடுதலின் போது பொதியொன்றினுள் வெடிக்காத நிலையில் 1,400 T-56 ரக தோட்டாக்கள் மீட்கப்பட்டன. குறித்த இந்த சம்பவம்...

இன்றைய நாளுக்கான வானிலை..!

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய​மென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவயில் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக...

இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு வலய கல்வி பணிமனைக்குட்ப்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களினால் இன்றைய தினம் (12.03.2025) மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக  கையளிக்கப்பட்டது. இவ்வாய்வு கூடத்தில் விஞ்ஞான ஆய்வு கூடம் மாணவர்களின் நவீன கல்வி செயற்பாட்டுக்காக கணினிமையம் மற்றும் நூலகம் அடங்கலாக நவீனபுதிய கட்டிடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில்...

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்! வட்டுவாகல் பாலத்தடியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்..!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் நடத்திவரும் நிலையில், இன்று(08.05.2025) கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதிகளவான பொலிஸார் குறித்த போராட்டமானது, வட்டுவாகல் பாலம் ஊடாக...

பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு!

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில்  உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img