அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பெரும்பாலான  பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் , மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும்  மழை பெய்யக்கூடும்.

மத்திய ,வடமத்திய , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் குருநாகல்   மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்ல் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here