Monday, June 8, 2026
No menu items!

மு.க ஸ்டாலின்

சிவகங்கை காவல்மரணம்: அஜித் குடும்பத்தை விஜய் சந்தித்து ஆறுதல் – நீதி கோரி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழ் நாட்டின், சிவகங்கை காவல் நிலையத்தில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தை தமிழ்நாட்டின் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன், அஜித்தின் தாயாருக்கு ரூ.2 லட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவியாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த முதல் முக்கிய அரசியல் தலைவராக விஜய் இருக்கிறார். இதற்கு...

கச்சத்தீவு தொடர்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது!

கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்மொழிந்து மு.க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை, முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக அமைந்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்...

தமிழக முதலமைச்சருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம், தி.மு.க தலைமையகத்தில் இன்றைய தினம் (19/02/2025) ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார்.

கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை; மு.க ஸ்டாலின்!

இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 34 பேரையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல்...

சிறீதரன் எம்.பிக்கு சவால் விடுத்த மீனவர் அமைப்பு..!

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார். நேற்றையதினம் (16/1/2025)...

பொழுது போக்கிற்காகவா மீன்பிடித் தொழில்? – ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த மீனவர்கள்!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வாழ்வாதாரத்திற்காக மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என்றால் நாங்கள் பொழுது போக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதி திரு.மகேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மாளினத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தங்களுடைய...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்கவும்; தமிழக முதல்வர்!

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சமீபத்திய சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்களின்படி, ஸ்டாலின், வெளியுறவு அமைச்சரிடம், இதுபோன்ற கைதுகளைத் தடுக்கவும், அவர்கள் பிடியில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக இராஜதந்திர...

தமிழக முதலமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்!

இலங்கை இகடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் மு.க...

ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறிய அரசாக மோடி அரசு செயற்பட்டு கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கைது, அபராதம், படகுகள் பறிமுதல் என மோடி ஆட்சியில் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை அரசு...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img