Thursday, July 23, 2026
No menu items!

மைத்திரிபால சிறிசேன

ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளை நிறுத்திய முன்னாள் ஜனாதிபதிகள்; அமைச்சர் ஆனந்த விஜேபால!

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் யஹாபாலன அரசாங்கத்தின் போது நூற்றுக்கணக்கான மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளை நிறுத்திவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "நான் யஹாபாலன அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்பு பிரிவின் இயக்குநராக இருந்தேன். எங்களுக்கு 1,200 புகார்கள் வந்தன, அவற்றில் 500...

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மைத்திரி பங்கேற்பு!

புதிய ஜனநாயக முன்னணியின் விசேட கூட்டம் நேற்று (24) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டமானது கொழும்பு 07, ப்ளவர் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இரண்டு மணி நேர இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பேசுபொருளாக மாறியுள்ள ரணில் – மைத்திரிபால கலந்துரையாடல்- அடுத்த கட்ட நகர்வு என்ன?

முன்னாள் ஜனாதிபதிகளாக ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கடந்த 30ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடிமை தொடர்பில் தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, இது சாதாரணமாக நடந்த சந்திப்பொன்று எனக் கூறியதுடன், அரசியல்வாதிகள் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது சந்திப்பது இயல்பானது...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை!

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், வேறுபல கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து...

கால்வாய்களை அவசரமாக அமைக்குமாறு மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை!

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல், அனுராதபுரம் மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குச் செல்லும் கால்வாய்களை அவசரமாக அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது வடமேற்கு மற்றும் அனுராதபுரம் பிராந்தியங்களில் விவசாயத்தை மேம்படுத்த உதவும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன கூறுகிறார். மேலும் மைத்திரிபால சிறிசேன மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொலன்னறுவை மாவட்டத்தில்...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் பதிவு செய்த மைத்திரி!

கொழும்பு ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றவாளியான ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவே...

ஒற்றையாட்சி முறையை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தது இனத்திற்கு ஒரு சாபக்கேடு; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சியில் இன்று (06.11.2024) ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதாக அறிவித்துள்ளார். அந்த அரசியல் அமைப்பு 2015 நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரிபால சிறிசேன ரணில் கொண்டு வந்த இடைக்கால அறிக்கையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.அந்த...

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன !

இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் ஒருபகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் கலந்து கொண்டு இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஊழல் குறித்து தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தமது எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க ,மைத்திரிபால சிறிசேன ,சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் ...

மைத்திரிபால சிறிசேனவில் சுயசரிதை வெளியீடு..!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயசரிதையான சிஹினயாநோனிமியாவை வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் வெளியிட்டார் . நிகழ்வில் பேசிய சிறிசேனா, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாதது குறித்து உரையாற்றினார். “என்னை இழிவுபடுத்த விரும்புபவர்கள் இந்த புத்தகத்தில் ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஏதாவது கண்டுபிடிக்க எதிர்பார்க்கலாம். நான் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட...

மைத்திரிபால சிறிசேனவின் மகன் மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, இலங்கை தொழிலதிபர் திலித் ஜெயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியில்  இணைந்துள்ளார். ம.ஜ.த.வில் இணைந்துகொண்ட தஹாம் சிறிசேன பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பில் உள்ள ம.ஜ.த.வின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற தஹாம் சிறிசேன, கட்சியில் இணைவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img