Sunday, November 15, 2026
No menu items!

மொனராகலை

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்..!

மொனராகலை, தம்பகல்ல , பிடதலாவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது. தம்பகல்ல , பிடதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுயைட இளைஞனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடந்த வியாழக்கிழமை (19.12.2024) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில்...

மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தற்காலிக பராமரிப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கு 2025 ஆம் ஆண்டிற்கு 25 மில்லியன்.  கம்பஹா, இரத்தினபுரி, மொனராகலை, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தற்காலிக பராமரிப்பு இல்லமும் அனுராதபுரம் மாவட்டத்தில் 02...

சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

மொனராகலை, தணமல்வில பிரதேசத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து 05 கிலோ...

மொனராகலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 174,730 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 62,014 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 11,624 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 10,697 சர்வஜன சக்தி...

சட்டத்தின் முன் அனைவரும் சமம் ;ஜனாதிபதி!

நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரசியலுக்கு ஒரு குறிப்பிட்ட தரம் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். மொனராகலையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய திஸாநாயக்க, அரசியல்வாதிகள் வரையறுக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் செயற்பட வேண்டும், சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும், மற்றும் நாகரீகமான அணுகுமுறையைப் பேண வேண்டும் என்று...

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் மொனராகலை மாவட்ட வேட்பாளர் கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதற்காக ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, இனந்தெரியாத நபர் ஒருவர் ஜீப்பின் சாரதியின் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி, குறித்த வேட்பாளரை தடியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான வேட்பாளர் மற்றும் சாரதி மொனராகலை கிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை...

பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒருவர் பலி!

மெதகம மொனராகலை வீதியில் பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பகினிகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மதுசங்க சமிந்த குமார என்ற நபரே இவ்விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஆபத்தான நிலையிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் தனது மனைவியின்...

பாரவூர்தியுடன் கெப் ரக வாகனம் மோதி விபத்து!

மொனராகலை - கொழும்பு வீதியில் பாரவூர்தியொன்றும் கெப் ரக வாகனமொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அந்த வாகனங்களின் சாரதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த இருவரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.   <!-- -->

போர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வயோதிபர் கைது!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதிகும்புர பிரதேசத்தில் போர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வயோதிபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை , வெதிகும்புர பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய வயோதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து போர் துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக...

சிறுவர் காப்பகத்தில் மாயமான இரு சிறுமிகள்..!

மொனராகலை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமிகள் இருவரும் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என்றும், இருவரும் நேற்று வியாழக்கிழமை (19) காலை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் சிறுவர் காப்பகத்திற்கு திரும்பவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...
- Advertisement -spot_img