Sunday, November 8, 2026
No menu items!

ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரம்!

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளார். முருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாட்டை தொடர்ந்து, தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். வர்த்தக நிலையங்கள் மற்றும் கிளிநொச்சி பொதுச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப்பிரசுரங்களையும்...

ஐ.தே.க பிரதான அமைப்பாளராக இஷாக் ரஹ்மான்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பல புதிய அமைப்பாளர் பதவிகள் கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டன. சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அநுராதபுரம் மாவட்டத்தின் கலாவெவ தேர்தல் தொகுதிக்கான ஐ.தே.க பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள்...

புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பிரதமர்..!

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (20.08) காலை அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வரும் பொது மக்கள் முன்னணியின் மாகாண சபைகள்...

யானைக்கு பதிலாக காஸ் சிலிண்டரை தெரிவு செய்ததன் காரணம்!

அண்மையில் இடம்பெற்ற “ரணிலிடம் கேளுங்கள்” நிகழ்ச்சியின் போது சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி யானைக்கு பதிலாக காஸ் சிலிண்டரை ஏன் சின்னமாக தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்தேன். அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கருத்து இன்று வலுவாக...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்ய வேண்டும்; ஜனக பண்டார…!

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்து அவருக்கு பிறிதொரு சின்னத்தை வழங்குங்கள். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எமக்க வழங்கியுள்ள சிலிண்டர் சின்னத்தை எவ்வாறு சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க முடியும் என மக்கள் போராட்ட சிவில் அமைப்பின் பொதுச்செயலாளர்  ஜனக பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில்...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், முன்னாள் அமைச்சரும் முன்னாள்...

தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவேன் ; ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதித் தேர்தலில் தம்மை முன்னிலைப்படுத்த எண்ணவில்லை என்றும் தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். "ஜனாதிபதித் தேர்தலில் நான் என்னை முன்னிலைப்படுத்தப் போவதில்லை, ஆனால் தேசத்தை மையமாக வைத்து பேசுவேன். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தேசத்தின் எதிர்காலம் பற்றியது" என்று 'புலுவன் ஸ்ரீலங்கா' ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்...

ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று ஆசி பெற்ற ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்று (15) சமர்ப்பித்த பின்னர், கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று, அங்கு ஸ்ரீ தலதா மாளிகையை வழிபட்டு ஆசி பெற்றார். ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம பாதுகாவலர் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் மேல் அறைக்குச் சென்ற...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் SJB உறுப்பினர்கள்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டு சமகி ஜன பலவேகய (SJB) எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கட்சிகள் மற்றும் கூட்டணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புலவன் ஸ்ரீலங்கா நிகழ்வில் கலந்துகொண்ட SJB பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 34 அரசியல் கட்சிகள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து 34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து ‘’Puluwan Sri Lanka” உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (16) காலை பத்தரமுல்லையில் உள்ள  Waters Edge ஹோட்டலில் இடம்பெற்றது.
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img