வனப்பகுதி
World News
ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – வெளியேறும் மக்கள்..!
ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல இலட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய செய்திகள்
நமுனுகுல வனப்பகுதியில் தீ விபத்து!
பதுளை, நமுனுகுல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பசறை-பதுளை சாலைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ, பாதுகாக்கப்பட்ட நிலத்தின் பெரும் பகுதியை அழித்துள்ளது.
தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
உள்நாட்டுச்செய்திகள்
பல்லாயிரக்கணக்கான கஞ்சா செடிகள் கைப்பற்றல்..!
அம்பாந்தோட்டை, தம்மென்னாவ வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16.02.2025) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 8,516 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புதிய செய்திகள்
நெட்டமலுவ மலை பகுதியில் தீ விபத்து!
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நெட்டமலுவ மலை காப்புப் பகுதியில் பாரிய தீ பரவி 20 ஏக்கருக்கும் அதிகமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எரிந்துள்ளது.
நேற்று பிற்பகல் (27) இந்த தீயானது அப்பகுதியில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக இரவில் வேகமாக பரவி, காப்புக்காட்டின் மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றின் அழிவை...
புதிய செய்திகள்
பதுளையில் பாரிய தீ பரவல் !
பதுளை, கொஸ்லாந்தை, பூனாகலை வனப்பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (27.06) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதுடன், ஐம்பது ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் வரட்சியான வானிலை மற்றும் காற்றின் வேகத்தால் தீ வேகமாகப் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூனாகலை மலைத் தொடரின் சரிவுகளில் கொஸ்லாந்தை மற்றும் வெல்லவாய...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


