ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல இலட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








