மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்ப்பதற்கு முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவை உலுக்கிய மார்ஷல் சட்டத்தின் பின்னர் இவர் ஏனைய உயர் அதிகாரிகள் பலருடன் பதவியை இராஜினாமா செய்தார்.
பின்னர் இவரை அதிகாரிகள் கைதுசெய்தனர் தற்போது கிளர்ச்சி குற்றச்சாட்டுகளிற்காக இவர் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையிலேயே அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.








